Saturday, 27 June 2020

பெரியவர்கள், குழந்தைகள் காலாட்டினால் வீட்டிற்கு ஆகாது என்று ஏன் சொல்கிறார்கள்?




உயர்ந்த இருக்கைகளிலோ, கட்டிலிலோ குழந்தைகள் அமர்ந்து காலாட்டுவதைக் கண்டால் "வீட்டுக்குத் தரித்திரம்" என்று கூறி குழந்தைகளை அதட்டுவார்கள். இதை ஒரு மூடநம்பிக்கை என்று சிறுவர்கள் அலட்சியப் படுத்துவார்கள்.

பொதுவாக நாம் காலாட்டும் போது அதிக அளவில் சக்தி வீணாகின்றது. உடலில் உள்ள சக்தி வீணாவதால் நமது மூளை விரைவில் சோர்வடைகிறது. அதனால் சிறுவர்கள் படிக்கும் போது சோர்வுடன் காணப்படுவர். இதை தவிர்க்கவே பெரியவர்கள் இவ்வாறு சொன்னார்கள். காலாட்டும் குழந்தையின் கால் தட்டி விலை மதிப்புள்ளதும், பற்றாக்குறையுள்ளதுமான பொருட்கள் உடையவோ சிதறவோ செய்யும் என்பதனாலும் காலாட்டினால் வீட்டுக்குள் தரித்திரம் வரும் என்று கூறினார்கள். மேலும் கட்டிலுக்கு அடியில் பெரியவர்கள் மருந்து, எண்ணெய், வெற்றிலை துப்பும் தம்பலாப் பாத்திரம் முதலியவை வைத்திருப்பார்கள் இவையும் உடைய நேரிடலாம்

இதை தவிர்க்கவும் பெரியவர்கள் காலாட்ட கூடாது என்று சொன்னார்கள்.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...