வணக்க முறைகள்
இன்னின்னாரை இந்த இந்த விதமாக வணங்க வேண்டும் என்று தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
வணங்கும்போது இரண்டு கைகளும் ஒன்றோடொன்று இணைந்து - அதாவது அஞ்சலி ஹஸ்தம் என்ற நிலையில் இருக்க வேண்டும்.
சிவனை வணங்கும்போது நம் தலைக்கு மேல் 12 அங்குல உயரத்தில் நமது கைகளைக் குவித்து வைத்து வணங்க வேண்டும்.
தேவர்களை தலைக்கு மேல் கையிரண்டும் குவித்து வணங்க வேண்டும்
குருவை நெற்றிக்கு நேராக இரு கை குவித்து வணங்க வேண்டும்
தந்தையையும், அரசனையும் வாய்க்கு நேராக இரு கை குவித்து வணங்க வேண்டும்
சான்றோர்களை மார்புக்கு நேராகக் கை குவித்து வணங்க வேண்டும்
அன்னையை வயிற்றுக்கு நேராகக் கை குவித்து வணங்க வேண்டும்
No comments:
Post a Comment