Thursday, 9 July 2020

அரியலூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்






அரியலூர் முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் ஓ.மு.எண்.3369/ஆ4/2020 நாள். 06.07.2020

பொருள் தொடக்கக்கல்வி- ஊக்க ஊதியம் 19972000 b ஆண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்க்கான இடைநிலை ஆசிரியர் பின்னடைவு காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன் நியமனம் செய்யப்பட்ட எஸ்.சி.எஸ் டி பிரிவைச் சேர்ந்த வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இடம் பெற்ற பணி நாடுநர்களுக்கு உயர் கல்வித் தகுதிக்குரிய ஊக்க ஊதியம் வழங்கிட கோரியது-சார்ந்து

பார்வை

எண் 301 பள்ளிக்கல்வி (பி1) துறை நாள்.15.03.1999 அரசாணை நிலை எண் 83, பள்ளிக்கல்வி (தொ.க 1(2) துறை நாள்.28.04.2017

1.அரசாணை நிலை

சென்னை-6, தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.0081/இ1/2015 நாள்.04.05.2017

அரசாணை நிலை எண்.101 பள்ளிக்கல்வித் துறை நாள்.18.05.2018

அரசாணை நிலை எண்.37 பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை (FR-IV)நாள்.10.03.2020 -

அரியலூர் மாவட்டத் தொடக்கப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மனு நாள்.22.06.2020.

பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 ஆண்டு முடிய ஏற்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) இடைநிலை ஆசிரியர் பின்னடைவு காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடைய உயர் கல்வித் தகுதி பெற்றுள்ள அதே இனத்தினைச் சார்ந்தவர்களை கொண்டு நிரப்பிடலாம் என முடிவு செய்து நிரப்பிட ஆணையிடப்பட்டது. அதில், உயர் கல்வித் தகுதிக்கான சிறப்பு ஊதிய உயர்வு இவர்களுக்கு பொருந்தாது என்ற நிபந்தனையின் அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்கப்பட்டு அரியலூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வித் துறையின் பணிபுரிந்து வருகின்றனர்

பார்வை உன் கண்டுள்ள அரசாணையில் தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 1997 முதல் 2000 ஆண்டு முடிய ஏற்பட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினருக்கான (SC/ST) இடைநிலை ஆசிரியர் பின்னடைவு காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடைய உயர்கல்வித் தகுதி பெற்று பணிபுரிந்து வரும் (315 இடைநிலை ஆசிரியர் + 105 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்) பள்ளி கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரிந்து வரும் 23 ஆசிரியர்கள் ஆக மொத்தம் 443 ஆசிரியர்களுக்கு அவர்களின் பணிநியமனத்திற்கு முன்னர் பின்னர் பெற்ற M.A., M.Sc., M.Ed ஆகியவற்றிற்கு ஏற்கனவே பார்வை 1ல் காணும் அரசாணையில் விதிக்கப்பட்ட உயர் கல்வித் தகுதிக்கான சிறப்பு ஊதிய உயர்வு இவர்களுக்கு பொருந்தாது என்ற நிபந்தனைக்கு தளர்வு அளித்து ஆணை வெளியிடப்பட்டது

அதனைத் தொடர்ந்து பார்வை 3ல் கண்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு பின்னடைவு காலிப்பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியர் தகுதியுடைய உயர் கல்வித் தகுதி பெற்று பணிபுரிந்து வரும் (315 இடைநிலை ஆசிரியர் + 105 தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்)  ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் அனுமதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வகையில் 19972000 ஆம் ஆண்டுகளில் SC/ST பிரிவினருக்கான இடைநிலை ஆசிரியர் பின்னடைவு பணியிடங்களில் பணியமர்த்தப்பட்டு தற்பொழுதும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து வருபவர்களுக்கு ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும் பார்வையில் கண்டுள்ள அரசாணையில் வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி அவ்வாசிரியர்கள் M.A

M.Sc, M.Ed போன்ற முதுகலைப்பட்டம் ஆகியவற்றிற்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணையிடலாம் என

---

பார்வை 5ல் கண்டுள்ள அரசாணையில் அரசு ஊழியர்களுக்கான முன்னைய உயர்வு காளை மட்டுமே இரத்து செய்து ஆணையிடப்பட்டுள்ளதால் அரசாணை எண்.42 பள்ளிக் கல்வித்துறை நாள்.10.01.1969 மற்றும் அரசாணை எண்.747 பள்ளிக்கல்வித் துறை நாள்.18.08.1986ன் அடிப்படையில் ஆசிரியருக்கு வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வுகளை வழங்கிட தடையேதும் இல்லையென்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர், அரியலூர்.

பெறுநர்

நகல்

அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அரியலூர் மாவட்டம்.


No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...