மனிதன் எவ்வளவு நேரம் உறங்கலாம்
அவனுடைய மரபியல் மூலக்கூறுகளும் தொடர்புடையதாக உள்ளது என்பதை இப்பொழு கண்டுபிடித்திருக்கின்றார்கள். பொதுவாக நம உறக்கம் மூளையின் மையப்பகுதியி கட்டுப்பாட்டின் கீழ் நடைபெறுகின்றது. இ, மரபியலின் தொடர்புடையதாக இருக்கலாம் என்று
அதனால் உறக்கம் பிறப்பின் போதே திட்டமிடப்பட்டு நிகழ்கின்றது என்றும் கருதுகின்றார்கள் இரட்டையர்களின் மூளைகளின் மின் துடிப்பலை தொடர்பான இயக்கங்கள் பற்றிய ஆய்வுகளிலிருந்து இப்புதிய கருத்துக்கள் மேலும் உறுதி செய்யட் பட்டிருக்கின்றன. (இரட்டையர்கள் உறங்கும் போது அவர்கள் உறக்கம் வர எடுத்துக் கொள்ளும் கொ அவர்களுடைய உறக்கத்தின் பல்வேறு இலைகள், அவற்றின் காலம், இவைகளுத்தின.
வேற்றுமைகள் காணப்படுகின்றன.) உறக்கம் என்பது என்ன? புல உணர்வுகள் விழிப்புணர்ச்சி இல் இருந்து மாறுபட்ட ஒரு மயக்க நிலை உறக்கம். இதனால் ஒரு சில புறச்சூழல் மாற்றங்களை உடனடியாக உணர்வதில் உள்ள திறமை தற்காலிகமாக இழக்கப்படுகிறது; மூளையின் செயல்பாடுகளில் பெரும் வியப்பிற்குரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உறக்கத்தில் இரு வகைகள் உள்ளன. அவை விழி இயக்க உறக்க நிலை (Rapid eye movement Stage) விழி இயக்கமற்ற உறக்க நிலை (Non-Rapid eye move ment Stage) என்பனவாகும். முதலாவது வகையான உறக்கம் மொத்த உறக்கம் காலத்தில் 25 சதவீதமாகும்
இந்நிலையில் மூடிய இமைகளுக்குள் விழிகள் இங்கு மங்குமாக இயங்கிய வண்ணமிருக்கின்றன. கனவுகள் ஏற்படுவது இந்நிலையில்தான். இந்நிலையில் இதயத் துடிப்பும், சுவாசித்தலும், இரத்த அழுத்தமும் சற்றே அதிகரிக்கின்றன. இதைத் தொடர்ந்து வரும் விழி இயக்க மற்ற உறக்க நிலையில் இரத்த அழுத்தம் குறைகின்றது. அதைத் தொடர்ந்து இதயத் துடிப்பும் சுவாசித்தலும் குறைகின்றன. மூட்டுக்களில் உள்ள தசை நாண்கள் உடனியக்கத் தன்மை குறைவுறுகின்றது
உறக்கத்தைத் தூண்டும் அடிப்படைக் காரணம் இன்னும் சரியாகத் தெரியவில்லை உறக்கம் உயிர் வேதியியல் முறையின் பின்னணியில் ஏற்படுகின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
மூளையின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்ற வேதியியல் பொருட்கள், மின் துடிப்பலைகளைக் கடத்துவதற்குத் துணை செய்து உறக்கத்தில் முக்கியப் பங்கேற்கின்றன
உறக்கமில்லாமல் நீண்ட காலம் இருக்க முடியும்
அதிகம் உறக்கத்தைத் தவிர்த்து, விழிப்போடு இருக்க வேண்டிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் போக்குவரத்துக் கண்காணிப்பாளர்கள், லாரி ஓட்டிகள் காவலர்கள், ஆலைத் தொழிலாளிகள் போன்ற பலரையும் ஆராய்ந்து பார்த்தபோது, ஆண்களை விடப் பெண்கள் உறக்கமின்மை மிக எளிதாகத் தாங்கிக் கொள்ளுகின்றார்கள் என்பது தெரிய வந்தது
பெண்களின் உடம்பில் காணப்படும் கூடுதலான கொழுப்புப் பொருட்களே இதற்குக் காரணம் என்று கூறுகின்றார்கள். இளவயதினரோடு ஒப்பிடும் போது 40 வயதைத் தாண்டியவர்கள் பொதுவாக உறக்கமின்மை த் தாங்கிக் கொள்ள முடியாது இன்னலுறுகின்றார்கள்.
முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் முக்கியமான விருப்பமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது மட்டும், ஒரு சில நாட்கள் உறக்கமின்மை எவ்வித இன்னலுமின்றித் தாங்கிக் கொள்கிறார்கள்.
எனினும் நீண்ட கால உறக்கமின்மை பொதுவாக உளநலக் குறைவை ஏற்படுத்துகிறது; சிலர் பைத்தியம் பிடித்துப் போவதும் உண்டு.
உடலிலும் மூளையில் ஏற்படும் தேய்மானத்தை செய்ய இந்த உறக்கம் துணை செய்யலாம் என்றாலும், அது உண்மையில் உடல் நலனுக்கு எப்படி பயனளிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக அறியப்படவில்லை
No comments:
Post a Comment