நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது யானை. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இந்த உலகில் மாம்மத் (Mammoth) என்ற பிரம்மாண்டமான விலங்கினம் வாழ்ந்து வந்ததாகவும், சூழ்நிலை களின் காரணமாக சிறிது சிறிதாக அழிந்து போனதாகவும் இந்த விலங்கினத்தின் பரம்பரையில் வந்ததே யானை என்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் கருத்து தெரிவிக் கின்றனர். இந்தப் பூமியில் ஆப்பிரிக்க யானை, இந்திய யானை ஆகிய இரண்டு வகையான யானைகள் காணப்படுகின்றன
பொதுவாக யானை அமைதியான இயல்பு கொண்டது; கள்ளம் கபடமில்லாத; இதனுடைய எடை அதிகபட்சம் 5 மெ.டன்.
இருக்கும் எவ்வளவு எடை இருந்தாலும், இதனுடைய கால்கள் தடித்து குறுகி காணப் படுவதால், இதனுடைய உடல் எடை சமநிலை யிலேயே இருக்கிறது வெளியே காணப்படும் இரண்டு பற்கள் யானைக்கு ஆயுதம் போல பயன்படுகின்றன வாயின் உள்ளே அமைந் திருக்கும் பெரிய பற்கள் அனைத்தும், உட் கொள்ளப்படும் உணவைக் கடித்து மென்று ஏன்? என்ன ? எப்படி?
வயிற்றின் உள்ளே கின்றன
அனுப்ப
யானை
51
பயன்படு
பொதுவாக யானைகள் கூட்டம் கூட்ட மாக வாழ்கின்றன. ஒரு யானை கூட்டத்தில் முதல் 50 வரையிலான யானைகள் இருக் கின்றன. யானைகள் காடுகளில் சுதந்திரமாக, தங்கள் விருப்பம்போல் திரிகின்றன. யானை யினுடைய உடல் உறுப்புக்களில் மிகவும் முக்கியமானது இதனுடைய துதிக்கை. இந்த உறுப்பு இல்லாமல் உயிர் வாழ முடியாது யானையின் பலம் தும்பிக்கை; மனிதனின் பலம் நம்பிக்கை' என்று பெரியவர் கள் கூறுவார்கள். அதாவது நமக்கு இரண்டு கைகளும் பலவகைகளில் உதவுவதைப் போல யானைக்கு துதிக்கை உதவுகின்றது
யானையின் உதடும், மூக்கும் ஒன்றாக சேர்ந்து நீண்ட உறுப்பான துதிக்கை உண்டாகிறது. துதிக்கையில் சுமார் 40,000 தசை நார்கள் இருக்கின்றன என்று ஆராய்ச்சி யாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் அதிக எண்ணிக்கையில் தசை நார்கள் இருப்ப தால்தான் துதிக்கை அதிக உறுதியானதாக வும், தொய்ந்து கொடுக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. துதிக்கையின் உதவியால் யானை பெரிய பெரிய மரத்துண்டுகளைக்கூட மிக எளிதில் தூக்குகிறது.
துதிக்கையின் நுனிப்பகுதி நமது விரலைப் போன்று மிகவும் மிருதுவான. துதிக்கை யின் நுனியைக் கொண்டு சிறிய ஊசியைக்கூட எளிதில் எடுத்துவிடக்கூடிய திறன் பெற்றுள் ளது யானை தனது துதிக்கையால் உணவுப் பொருளை எடுத்து, வாயில் இட்டுக்கொள் கிறது. மேலும் யானை துதிக்கையின் உதவி யாலேயே தண்ணீரை உறிஞ்சிக் குடிக்கிறது.
குளிக்கும்போதும் துதிக்கையைப் பயன் படுத்துகிறது. துதிக்கையில் தண்ணீரை 6T எடுத்து, முதுகில் கொட்டிக் கொண்டு யானை குளிக்கிறது. இப்படியாக துதிக்கை யானை குப் பல வகைகளில் பயன்படுகிறது.
யானையின் துதிக்கையைப் பயன்படுத்தி, காடுகளிலிருந்து மரங்களைக் கொண்டு வரவும் இது தவிர வேறு பல வேலைகளுக்கும் யானை பயன்படுத்தி வருகிறார்கள்.
No comments:
Post a Comment