தர்மபுரி மாவட்டம், நல்லம் பள்ளி ஒன்றியம் தொப்பூர் ஊராட்சி உம்மியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 286 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்குகால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் எப்போது திறக்கப்படும் என உறுதியாக தெரியாத நிலை உள்ளது. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம், தங்களது மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி வருகின்றன. இதையடுத்து உம்மியம்பட்டி அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் நரசிம்மன் தலைமையில் ஆசிரியர்கள் ராதாகிருஷ்ணன், எழிலரசி, நிர்மலா ரோஸ்லின், புஷ்பா ஜெயபாரதி ரோஸ்லின், செண்பகம், சுதா ஆகியோர் அடங்கிய குழு அமைத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்காக வாட்ஸ் அப் குரூப் தொடங்கியுள்ளனர்.
இந்த குழுவில் பள்ளியின் அனைத்து மாணவர் களையும் இணைதுள்ளனர். வாட்ஸ் அப் மூலம் அனைத்து மாணவர்களுக்கும், வகுப்பு வாரியாகவும், பாட வாரியாகவும் ஆசிரியர்கள் தினசரி பாடம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் எழுதி முடித்த பகுதிகளை புகைப்படம் எடுத்து குழுக்களில் பதிவிடுகின்றனர். அந்த பதிவுகளை ஆசிரியர்கள் தினசரி மதிப்பீடு செய்து, அதில் உள்ள நிறைகளை ஊக்குவித்தும் குறைகளை சுட்டிக்காட்டியும் பதிவு செய்கின்றனர்
இதனால், மாணவர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள்ளுக்கு பாராட்டு தெரி வைத்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் நரசிம்மன் கூறுகையில், 'எங்கள் பள்ளியில், கடந்த மே மாதம் முதல் வாட்ஸ் அப் குழு தொடங்கி பாடம் நடத்தி வருகிறோம். அதிகம் பொது அறிவு கேள்விகள் கேட்கிறோம். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் பாடங்களை வீட்டில் இருந்தபடியே படிக்க இணையதளத்தை கொண்டு வந்துள்ளது, என்றார்.
No comments:
Post a Comment