Thursday 29 November 2018

அறிவியல் அறிவோம் -சூரியன் இல்லாவிட்டால் பூமி என்னாகும் ?




பூமி முழுவதும் இருளில் மூழ்கியிருக்கும். குளிர் அதிகமாகும். தாவரங்களால் உணவு தயாரிக்க முடியாது. தாவரங்கள் மடிந்தால், தாவரங்களை நம்பி வாழும் உயிரினங்களுக்கும் உணவு கிடைக்காது. நீர்நிலைகள் எல்லாம் உறைந்துவிடும். விரைவில் வாழ இயலாதகோளாக பூமி மாறிவிடும். சூரியன் இல்லாவிட்டால் பூமியும் இல்லை. சூரியனே அனைத்துக்கும் வாழ்வாதாரம். சூரியன் இன்னும் 500 கோடி வருடங்கள்வரை இருக்கும். அதற்குப் பிறகு வெள்ளைக் குள்ளன், கறுப்புக் குள்ளன் போன்ற நிலைகளைக் கடந்து, பூமி போன்ற கோள்களை இழுத்துக்கொள்ளும். அதனால் சூரியன் இல்லாமல் பூமியோ மற்ற கிரகங்களோ இருக்க முடியாது.

No comments:

Post a Comment