Saturday, 27 June 2020

குழந்தைகளின் முகத்தை கண்ணாடியில் பார்க்கக் கூடாதாமே ஏன்?




குழந்தைகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியை காண்பிக்கக் கூடாது என்று தாய்மார்கள் சொல்வதுண்டு. குழந்தைகளுக்கு அது தன் முகம் என்று புரிந்து கொள்ளும் தன்மை இல்லாத காரணத்தினால் சொந்த பிரதி பிம்பத்தை நண்பன் என்று கருதி விளையாடும் விளையாடும் எண்ணத்தில் கண்ணாடியை கீழே போடும் அல்லது கண்ணாடியில் கைகளை கொண்டு தட்டுவதன் மூலம் கண்ணாடி உடைந்து கைகளை பதம் பார்க்கும் காயம் ஏற்படவும் வாய்ப்புண்டு. கண்ணாடி பார்க்கும் குழந்தைகள் தன்னை அழகுபடுத்திக் கொள்வதில் ஆர்வம் கொண்டு அதிலே ஈடுபடுவார் கள். ஆனால் படிப்பில் கவனம் சிதறும். கண்ணாடி பார்க்கும் போது சில நேரம் சூரிய ஒளி கண்ணாடியில் பட்டு பிரதிபலிக்க வாய்ப்புண்டு.

அது குழந்தையின் ரெட்டினாவை பாதிக்கும். இதனால் குழந்தையின் பார்வை பாதிப்படையும். மேலும் கண்ணாடியில் தெரியும் பிம்பம் யாரோ என்று குழந்தை அழவும் நேரிடலாம். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு பெரியவர்கள் குழந்தைகளுக்கு கண்ணாடி காண்பிக்க கூடாது என்று சொன்னார்கள்.

No comments:

Post a Comment