Thursday, 2 July 2020

அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் EMIS இல் பதிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.




அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களின் விவரங்களை காலதாமதம் செய்யாமல் EMIS இல் பதிய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் பிளஸ்2 வகுப்பை படித்து முடிக்கும் மாணவர்கள் ளுக்கு கடந்த 2011-12ம் கல்வியாண்டு முதல் ஒவ் வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் பிளஸ்2 வகுப்பை முடித்த மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குவ தற்கு மாணவர்களின் வங் கிக்கணக்கை சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த 5லட்சத்து 35 ஆயிரத்து 82 பேருக்கு ரூ 107 கோடி பள்ளிக்கல்வி துறையால் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மாணவர்களின் வங்கி கணக்கு விவரங் களை சம்பந்தப்பட்ட பள்ளிகள் பெற்று, பள்ளிக் கல்வித்துறையின் கல்வி யல் மேலாண்மை தகவல் மையத்தில் இஎம்ஐ எஸ் சில் பதிவு செய்ய உத்தர விட்டுள் ளது. ஆனால் இதுவரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 108 மாணவர்க ளின் விவரங்கள் மட்டுமே அதில் பதிவு செய்யப்பட் டுள்ளது. எனவே விரைந்து மற்ற மாணவர்களின் வங் கிக்கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.

அதன்படி கடந்த சில நாட்களாக அனைத்து அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயி லும் மாணவர்களின் விவ ரங்கள் இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் பல பள் ளிகள் இப்பணியில் சுணக் கம் காட்டி வருவதாக குற் றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது அரசு மற்றும் நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி பள்ளிகளில் 20192020 ம் கல் வியாண்டில் 12 வகுப்பு பயன்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது. அதற்கு காக மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை இஎம்ஐஎஸ் இணையதளத் தில் முழுமையாக உள்ளீடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது

ஆனால் பல பள்ளிகள் இன்னும் அதை உள்ளீடு
செய்யவில்லை. உள்ளீடு செய்யாத பள்ளிகள் விவரங்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி தகுதியடைய மாணவர்களுக்கு விவரத்தை உள்ளீடு செய்ய வேண்டும். தகுதியில்லா மாணவர்கள் விவரத்தையும் தனியாக பதிவு செய்ய வேண்டும்.

இந்த பணியை காலதாமதம் செய்யாமல் விரைவில் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.

No comments:

Post a Comment