பள்ளிக்கல்வித்துறையின் ஜே.ஆர்.சி அமைப்பு சார்பில் பெத்தநாயக்கன்பாளையம், வட்டார கல்வி அலுவலர் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு முகக்கவசங்கள்,கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது. மாவட்ட ஜே.ஆர்.சி கன்வீனர் பிரபாகர் அறிவுரையின் படி, ஜே.ஆர்.சி ஆலோசகர் ஜோசப்ராஜ் வட்டார கல்வி அலுவலரிடம் வழங்கினார்.பின்னர் பேசிய வட்டார கல்வி அலுவலர் முனியப்பன் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கபசுரக்குடிநீர் பருக வேண்டும், அரசு கூறும் அறிவுரைபடி நடக்க வேண்டும் என அலுவலக ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார்.
No comments:
Post a Comment