Saturday 4 July 2020

பைசா கோபுரம் சாய்ந்திருப்பது ஏன்?




இத்தாலி நாட்டில் உள்ள பைசா நகரில் உள்ள (Pisa) கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோபுரம் பைசா கோபுரம்' என்றே அழைக்கப்படு கிறது இந்தக் கோபுரத்திற்குப் பெருமை சேர்ப்பது இதனுடைய சாய்வு நிலைதான்

து நேராக நில்லாமல் சாய்ந்தே இருக்கிறது.

சாய்வாக நிற்பதேன் தான் இதை ஒரு அதிசயமாகப் பார்க்கப் பெருமளவில் மக்கள் வருகிறார்கள். இக்கோபுரம் பளிங்குக் கல்லால் ஆனால். இதனுடைய அடித்தளச் சுவர்கள் சுமார் 4 மீ. பருமனானவை. எட்டு மாடிகள் கொண்ட இந்தக் கோபுரத்தின் உயரம் 55 மீ

மேலே செல்வதற்கு இதனுள்ளே படிக்கட்டு அமைந்துள்ளது.

பைசா கோபுரம் கிட்டத்தட்ட 5 மீ

சாய்ந்து நிற்கிறது. அதாவது இதனுடைய உச்சியிலிருந்து ஒரு பந்தை நேராக கீழே போட்டால் அந்தப் பந்து 3 கோபுரத்தின் அடித் தளத்திலிருந்து 5 மீ, தொலைவில் விழும் ஆம் ஆண்டு இந்தக் கோபுரத்தின் பணி ஆரம்பிக்கப்பட்ட து 1350. ir கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இதனைக் கட்டத் தொடங்கியது இந்தக் கோபுரம் சாயம் போகிறது என்பதை யாரும் எதிர் பார்க்கவில்லை

மூன்றாவது தளத்தைக் கட்டும் போது இந்தக் கோபுரம் சரிய ஆரம்பித்தது. இதனு டைய அடிக்கல் மணற்பாங்கான நிலத்தில் கட்டப்பட்டதே இதற்குக்காரணம், கோபுரத் தின் ஒரு பகுதி' மணற்பாங்கான நிலத்தில் அழுந்தியதால் இந்தக் கோபுரத்தில் சாய்வு ஏற் பட்டது. கோபுரத்தில் சாய்வு ஏற்பட்டவுடன் கோபுரத்தினுடைய கட்டுமானத் திட்டத்தில் சிறிது மாறுதல்களைச் செய்து கோபுரத்தின் வேலையைப் பூர்த்தி செய்தனர். கடந்த 100 வருடங்களில் மட்டும் இந்தக் கோபுரம் 30 செ.மீ.க்கும் அதிகமாகச் சாய்ந்துவிட்டது என்று கண்டறிந்துள்ளனர்.

சாய்ந்த நிலையில் இருக்கும் கோபுரம் ஏன் விழவில்லை என்பது குறித்து அறிஞர்களிடையே பெரிய சர்ச்சை எழுந்து உள்ளது பொதுவாக ஒரு பொருளின் ஈர்ப்பு மையம் (Centre of Gravity) அதனுள்ளே இருக்கும் வரை அந்தப் பொருள் ேழ விழாது என்பது விஞ்ஞானிகளின் கருத்து பொருளின் மொத்த உள்ளடக்கம் அல்லது மொத்தப் பொருண்மை எந்த இடத்தை மையமாகக் கொண்டு இருக்கிறதோ, அந்தப் பொருளின் ஈர்ப்பு மையம் ஆகும்

இதன்படி பார்த்தால் பைசா கோபுரம் தின் ஈர்ப்பு மையம் இந்தக் கோபுரத்தின் உள்ளேயே அமைந்துள்ளது, பைசா கோபுரம் விழவில்லை என்பது அறிஞர்களின் கருத்து தற்சமயம் கோபுரத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லை. கோபுரம் சாய்ந்து கொண்டு வரும் வேகம் அதிகரித்து, ஈர்ப்பு மையம் கோபுரத்தைவிட்டு வெளியே வரும் போது பைசா கோபுரம் விழக்கூடிய அபாயம் உண்டு. ஆனால் அந்த அபாயம் ஏற்படாத அளவில் அறிஞர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் முயற்சிகளின் பயனாக பைசா கோபுரம் காப்பாற்றப் பட்டுவிடும் என்று நம்பலாம்.

1 comment:

  1. Till today as I know it's a seven wonders of the world but today I know the main reason I thought that it was designed basically like that thanks for ur information

    ReplyDelete

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...