Thursday 2 July 2020

கற்ற கல்வி பயன் தராதா ?கதை




ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவனுக்குக் கல்வி கற்பதில் எல்லையற்ற ஆர்வம் இருந்தது

எகிப்து நாட்டில் ஆசிரியர் ஒருவர் உள்ளார். ஒருவரைப் பார்த்த உடன் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறியும் கல்வியைக் கற்றுத் தருகிறார். ஆனால் அந்தக் கல்வியைக் கற்றுக் கொள்வது எளிது அல்ல' என்று கேள்விப்பட்டான் அவன்

பல நாட்கள் பயணம் செய்து எகிப்து நாட்டை அடைந்தான் அவன்

அந்த ஆசிரியரிடம் மாணவன் சேர்ந்தான். ஆறு ஆண்டுகள் அங்கேயே தங்கிப் பயின்றான்

அவனை அழைத்த ஆசிரியர் ''ஒருவரைப் பார்த்த உடன் அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறியும் கலையில் நீ தேர்ச்சி பெற்று விட்டாய். இப்படித் தேர்ச்சி பெற்றவர்கள் அரிது. உன் முயற்சிக்கு என் பாராட்டுகள். இனி நீ உன் ஊர் செல்லலாம்" என்றார்.

அவரை வணங்கி விட்டுத் தன் ஊர் புறப்பட்டான் அவன். வழியில் சந்தித்த ஒவ்வொருவரும் எப்படிப்பட்டவர் என்பது அவனுக்கு நன்றாகப் புரிந்தது

ஓர் ஊரை நெருங்கினான் அவன். எதிரே வந்த பெரியவரைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்

வஞ்சகம், சூழ்ச்சி, பொறாமை, ஏமாற்றுத்தனம், பொய் கருமித்தனம் அனைத்தும் நிறைந்தவராக அவர் தெரிந்தார்

ஐயோ! இப்படிப்பட்ட கொடியவரைச் சந்திக்க வேண்டி வந்ததே என்று கலங்கினான் அவன்
இளைஞனை நெருங்கிய அவர் "ஐயா! இப்பொழுது இருட்டி விட்டது. அடுத்தவர் வெகு தொலைவில் உள்ளது. நீங்களோ மிகுந்த களைப்புடன் உள்ளீர்கள். என் வீட்டில் இன்றிரவு விருந்தினராகத் தங்குங்கள். நீங்கள் வந்தால் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன். என் வேண்டுகோளை மறுக்காதீர்கள்" என்று இனிமையாகப் பேசினார்.

இப்படிப்பட்ட அன்பான பேச்சை எதிர்பாராத இளைஞன் திகைத்தான்.

இவர் பேச்சு இனிமையாக உள்ளது. ஆனால் எனக்குக் கொடியவராகத் தோன்றுகிறாரே. உண்மையை அறிய வேண்டும்' என்று நினைத்தான்.

"உங்கள் விருந்தினனாக இன்றிரவு தங்குகிறேன்'' என்றான்

மிகுந்த மரியாதையுடன் இசைஞன் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் அவர்

சுவையான விருந்து பரிமாறப்பட்டது. இளைஞனை மிகுந்த அன்புடன் உபசரித்தார் அவர்

அந்த வீட்டை விட்டுச் செல்ல இளைஞனுக்கு உள்ளமே வரவில்லை. மூன்று நாட்கள் அங்கேயே இனிமையாகப் பொழுதைக் கழித்தான்.

தம் - 21

அவருடைய அன்பான பேச்சும் அருமையான விருந்தோம்பலும் அவனுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

ஆறு ஆண்டுகளாக நான் கற்ற கல்வி வீணாகி விட்டதா? எனக்குக் கொடுமையானவராக இவர் தோன்றினாரே. இந்த மூன்று நாட்களில் என் உள்ளம் நோகும்படி இவர் நடந்து கொள்ளவில்லை.

நற்பண்புகள் அனைத்தும் நிறைந்தவராக உள்ளாரே என்று நினைத்தான்.

ஐயா! உங்கள் அன்பிற்கும் விருந்தோம்பலுக்கு நன்றி. என் ஊருக்குச் செல்ல வேண்டும். அனுமதி தாருங்கள் என்றான் அவன்

உடனே அவர் ஒரு தாளை இளைஞனிடம் தந்தார். "நீங்கள் மூன்று நாட்கள் தங்கியதற்கான தொகை இதில் குறிக்கப்பட்டு உள்ளது என்றார்

என்ன தங்கியதற்கான தொகையா என்று வியப்புடன் கேட்டான் அவன்

அவ்வளவுதான். அதுவரை இனிமையாக இருந்த அவருடைய முகம் கொடூரமாக மாறியது. பற்களைக் கோபத்துடன் கடித்த அவர் "என்ன தொகை என்றா கேட்கிறாய்? நீ கேட்டதெல்லாம் மூன்று நாட்களுக்கு இனாமாகக் கிடைத்தது என்று நினைத்தாயோ?" என்று கத்தினார்.

தன் உணர்வு வரப் பெற்ற இளைஞன் அந்தத் தாளை வாங்கினான்.

அதில் எழுதி இருந்த தொகையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.

அவன் தங்கியது சாப்பிட்டது எல்லாம் ஒன்றுக்கு நூறு மடங்கு அதில் குறிக்கப்பட்டு இருந்தது.

அதில் குறிப்பிட்ட தொகையில் இல்லை

பாதிப் பணம் கூட அவனிடம்

வேறு வழியில்லாத அவன் தான் வைத்திருந்த பணத்தையும் குதிரையையும் அவரிடம் தந்தார்.

நடந்தே புறப்பட்ட அவன் "கடவுளே! உனக்கு எப்படி நன்றி சொல்வேன்? ஆறு ஆண்டுகளாக நான் உழைத்துக் கற்ற கல்வி வீணாகவில்லை'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னான்

No comments:

Post a Comment