Wednesday, 8 July 2020

ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது -பழமொழிக்கட்டுரை




எண்ணம் போல் வாழ்வோம் என்பது இன்று பல மனவியலார் கூறும் கூற்று. இது முற்றிலும் உண்மை அவரவர் வாழ்வு அவரவர் கையிலே என்பது வினைப் பயன் மற்றும் எண்ணத்தைப் பொறுத்தது இல்லறம் நல்லறமானால் அங்கே இல்லாமை என்பது இல்லாமையாகும் சாதாரணமாக ஒரு வீட்டில் இருக்கக் கூடாதது வறுமை. இது இருந்தால் இல்லாமைக்குறைபாடு வரும். இஃது ஏற்படக் காரணம் 'கல்லாமை' இருந்தால் கல்வி சுற்றுச் சிறந்தவராக விளங்கவில்லை எனில் அறிவில் லாமையின் காரணமாகப் பொருளீட்ட முடி யாது இல்லாமை தாண்டவமாடும். எனவே ஆமை' என்பது அப்படிப்பட்ட இல் + ஆமை கல் + ஆமை களையா குறிக்கிறது என்று வின வினால் ஓரளவு இது பொருந்தும் என்றே சொல்லலாம்.

தவிர மனிதனுக்குரிய பண்புகள் சொல்லுமிடத்து அவனிடம் இருக்கக் கூடாத ஆமை' ஒன்று உண்டு. அது தான் பொறாமை இது மனிதனின் உள்ளத்து உணர்வில் குடி கொண்டு விட்டால் அவன் எத்தகைய அறிவாளியாக இருந்தாலும் அறிவிலியாகி, வளம் குன்றி. நன்மை இழந்து, வளமை யொழிந்து தீமை என்னும் நரகில் வீழ்த்தியதை நாம் நமது இதிகாச இலக்கிய, காப்பிய கதை மாந்தரில் கண்டதில்லையா? ஏன் இன்றும் நாம் அன்றாட வாழ்வில் கண்டும், கேட்டும் உணர்ந்து வரும் நிகழ்வுகள் எத்தனையோ? எனவே நமக்கு இருக்கக் கூடாத ஆமை' என்பது பொறாமை' என்று புலப்படு கிறது. ஆனால் இவற்றுக்கும் மேலாக ஒரு பொருள் உண்டு

ஆமை' - என்பதற்கு ராஜ சின்னம், நோய் என்னும் பொருட்களும் உண்டு. இந்நோக்கில் ஆமை புகுந்த வீடு என்று பார்க்கும் போது 'நோய் புகுந்த வீடு' படும் இன்னல் களைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். ஆம். 'நோயற்ற வாழ்வே செல்வம் என்று கூறியதில் இருந்து 'நோயுற்றால் செல்வம் செல்வோம் என்றாகிவிடும். பிறகு இல்லத்தில் ஏது இனிமை? எனவே நோயின்றி - நோய், நொடி என்னும் ஆமை நம் வீட்டில் புகாமல் இருக்க உண்ணும் உணவு, பருகும் நீர் நுகரும் காற்று இவற்றில் தூய்மையைக் கடைப்பிடித்து வாழ மறை முகமாக உணர்த்துகிறது என்பது சாலப் பொருந்தும் இன்றோ

மேலும் அமீனா' என்பது இன்றைய காலத்தில் நீதிமன்ற உத்தரவு பெற்று வழக்கின் காரணமாக 'லீட்டுப் பொருட்களை "ஜப்தி செய்ய வரும் அரசாங்கம் காவலரைக் குறிக்கும் பண்டைக் காலங்களில் மன்னர் ஆட்சி இருந்தபோது அமீனாவின் வேலையை ராஜ சின்னம்' அணிந்து வீரர்கள், காவலர் இவ்வேலையைச் செய்வர்.

ஆகையால் இத்தகைய அமீனாக்கள் ஒரு மனித னின் வீடு தேடி வரக்கூடாது வந்தால் துன்பம்! இழுக்கு

எனவே வம்பு வழக்கின்றி பிறரை ஏமாற்றி வாழாமல் வாழ அறிவுறுத்தும் மொழியாகும். இப்பழமொழி,

'ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் விளங்காது என்பதைச் சொல்லாமற் சொல்லிப் புரிய வைக்கின்றது அறத்தோடு, தூய்மையோடு வாழும் வாழ்க்கை முறை மையை என்பதே சரியாகும்.

No comments:

Post a Comment