Tuesday 7 July 2020

கத்தரிக்காய் திருடு போதல் - தெனாலிராமன் கதை




மன்னர் கிருஷ்ணதேவராயரின் தோட்டத் தில் பலவிதமான பழவகை மரங்களும் காய்கறிச் செடிகளும் இருந்தன. அவற்றில் உயர்ரக வகை கத்தரிக்காய் செடியும் ஒன்று

ஒரு நாள் மன்னர் அரண்மனையில் வெளி நாட்டுத் தூதுவர்கள் வந்திருந்ததால் பெரிய விருந்து நடந்தது

அந்த விருந்தில் தெனாலிராமனும் கலந்து கொண்டு நன்கு சாப்பிட்டான். விருந்திலேயே அவன் மிகவும் சுவைத்துச் சாப்பிடுவது அந்த அற்புதக் கத்தரிக்காய் தான்.

விருந்து முடிந்ததும் தெனாலிராமன் நேரே வீட்டிற்கு வந்தான். விருந்தில் கத்தரிக்காய் ருசி பற்றி மனைவியிடம் ஒரேயடியாகப் புகழ்ந்தான்

இதைக் கேட்ட அவன் மனைவிக்கு அந்தக் கத்தரிக்காய் சாப்பிட வேண்டுமென்று எச்சில் ஊறியது நாக்கில் தன் ஆசையை தெனாலிராமன் னிடம் தெரிவித்தாள். அதற்குத்தெனாலிராமனோ தோட்டத்தில்

கத்தரிக்காயை அரண் மனை இருந்து பறிந்து வரமுடியாது. ஏகப்பட்ட காவல்

மேலும் கையும் களவுமாகப் பிடிபட்டால் மரண தண்டனை தான் கிடைக்கும். ஆகையால் என் னால் கத்தரிக்காய் கொண்டு வர இயலாது தெரிவித்து விட்டான் என

மனைவி

இருப்பினும் அவன் இல்லை. "உங்களிடம் வருவதாக எதுவும் நான் வேறு கேட்கவில்லை. ஆசைப்பட்டு கத்தரிக்காய் தானே கேட்கிறேன். இது கூடவா உங்களால் முடியாது" என்று அவனை நச்சரிக்கத் தொடங்கி னாள்

மனைவியின் நச்சரிப்புத் தாங்க முடியாமல் கத்தரிக்காய் திருடத் தீர்மானித்தது அன்று இரவு தோட்டத்துக்குள் புகுந்து நிறைய கத்தரிக் காய்களைப் பறித்துக் கொண்டு ஒருவருக்கும் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தான்

கத்தரிக்காய்களை மனைவியிடம் கொடுத்து சமையல் செய்யச் சொன்னான். அவன் மனை வியும் அன்று நள்ளிரவில் சமையல் செய்து முடித்தாள். பின் சுவைத்துப் பார்த்தாள் தெனாலி ராமன் சொன்னது போலவே மிகவும் ருசியாக இருந்தது

கத்தரிக்காயை வெளித்திண்ணையில் படுத் துறங்கும் சிறுவன் தன் மகனுக்கு கொடுக்க விரும்பினாள். ஆ னா ல் தெனாலிராமனோ அவனுக்கு கொடுக்க விரும்பவில்லை. காரணம் அவனோ சிறுவன் நாளை கத்தரிக்காய் திருடு கண்டு பிடிக்கப்பட்டமை குறித்து விசாரணை வந்தால் சொல்லி விடுவானே என்று பயந்தான்

விடுவதாக இல்லை . அவனுக்கும்

அவன் மனைவி அவசியம் கொடுக்க விரும்பினார்

இதற்கு தெனாலிராமன் ஒரு தந்திரத்தைக் கையாண்டான். வெளியில் படுத்திருந்த தன் மகன் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றி நனைத்தான். பின் அவனை எழுப்பி "தம்பி இப் போது மழை பெய்கிறது. ஆகவே உள்ள வந்து படு" என்றான் தெனாலிராமன். இது உண்மை யென்றே நம்பினான் அச்சிறுவன்

பின் அவனை உள்ளே அழைத்துச் சென்று வேறு உடை உடுத்தி விட்டு கத்திரிக்காய் குழம்பு சாதம் பரிமாறப்பட்டது. அவனும் சாப்பிட்ட வுடன் தூங்கி விட்டேன்

மறுநாள் அரண்மனை தோட்டத்தில் ஏராள கத்தரிக்காய் திருடு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ம ன் ன ர் எல்லோரையும் அழைத்து விசாரித்தார்

கை

ராஜகுரு தாத்தாச்சரியார் "இது ராமனின் வரிசையாக கத்தான் தெனாலி இருக்கும் இப்படிப்பட்ட காரியத்தைத் செய்வார் என் றார் மன்னரும்

அ வ ன் த ா ன் துணிந்து நம்பினார் பின் தெனாலிராமன் அழைத்துவரப்பட்டார்.

மன்னர் தெனாலிராமனிடம் விசாரித்ததில் கத்தரிக்காய் திருட்டுக்கும் எனக்கும் சம்பந் தமே இல்லை" என்று ஒரேயடியாகச் சாதித்து விட்டான்

பின் இவனிடம் விசாரிப்பதில் ஒன்றும் பயன் ஏற்படாது என்று கருதிய மன்னர் அவன் மக னிடத்தில் விசாரித்தால்தான் உண்மை வெளிப் படும் என்று கருதி மகனை அழைத்து வரச் செய் தார்

தெனாலிராமன் மகன் அழைத்து வரப்பட்டு டான். அவனிடம் மன்னர் நேற்று என்ன குழம்பு சாப்பிட்டாய் என்று கேட்டார். அதற்கு அந்தச் சிறுவனோ "நேற்று இரவு மழை பெய்து கொண் டிருந்தபோது கத்திரிக்காய் குழம்பு சாப்பிட் டேய்” என்றான்

இதைக்கேட்ட மன்னர் உட்பட அனைவரும் திகைத்தனர். நேற்று மழையே பெய்யவில்லை.

அப்படியிருக்க சிறுவன் மழை பெய்ததாக உளறு கிறானே! இது அவன் கண்ட கனவாக இருக்கும் என்று நினைத்து யும் வேறு ஒன்றும் கேட்காமல் விட்டு விட்டார்

இவ்வாறு தெனாலிராமன் தன் தந்திரத்தால் தப்பித்துக் கொண்டான்.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...