Wednesday 8 July 2020

நாம் கண்களை அடிக்கடி இமைப்பது ஏன்?




நம்முடைய கண்களை இமைகள் மூடிக் கொண்டுள்ளன. இந்த இமைகள் கண்களைப் பல வகைகளில் ஆபத்துக்களில் இருந்து கேட்கின்றன. இமைகள் அடிக்கடி மூடித்

திறப்பதை 'கண் இமைத்தல்' என்கின்றோம்

கண் இமைத்தல் என்பது இடைவிடாமல் தானாகவே நடைபெறும் ஒரு நிகழ்ச்சியாகும் தூங்கும் நேரத்தைத் தவிர, மற்ற நேரங்கள் அனைத்தும் எல்லாவித வேலைகளுக்கு இடையிலும் அடிக்கடி இமைத்து கொள்கிறோம். கண் இமைத்தல் நிகழ்ச்சியை ஒரு வேலை போலவே நாம் நினைப்பதில்லை. நாம் மூச்சு விடுவது போலவே கண் இமைத்தலும் ஆகும்

நாம்

ஒரு நிமிடத்திற்குச் சராசரியாக நாம் முறை கண்களை இமைக்கிறோம் என்று விஞ்ஞானிகள் கணக்கெடுத்து உள்ளனர் இதன் படி கணக்கிட்டால், ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 25 கோடி தடவை கண்களை இமைப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்

நாம் கண்களை இமைக்கும் போது, கண்ணின் இமைகள் மேலும் கீழும் அசைகின்றன கண்ணினுடைய மேல் இமையின் அடிப்பகுதி யில் பல கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன

நாம் கண்களை இமைக்கும் போது கண்ணீர்ச் சுரப்பிகள் ஒருவகையான உப்பு ரைச் சுரக்கின் றன. இந்த உப்பு நீர் கண்கள் உலாந்து போகாமல் பாதுகாக்கிறது. இந்த உப்பு நீர் அதிக அளவில் சுரக்கும் போது அதை நாம் கண்ணீர் என்று வழங்குகிறோம்

நாம் அழும் போது கண்ணீர்ச் சுரப்பிகள் அதிக அளவில் உப்பு நீரை வெளியேற்றுகின்றன.

பொதுவாக கண் இமைத்தல் என்பது கண் களுக்குப் பாதுகாப்பு அளிக்கக்கூடிய செயல் அமைப்புத் திட்டம் என்று கூறுகிறார்கள்

கண் களில் புழுதித் துகளோ அல்லது கண் களை உறுத்தும் ஏதாவது ஒரு பொருளோ விழுந்துவிட்டால், கண்ணீர்ச் சுரப்பிகள் அதிக அளவில் உப்பு நீரை வெளியேற்றி, கண்களுக்கு ஆபத்தான பொருளை கண்ணீருடன் சேர்த்து வெளியேற்றிவிடுகிறது. மேலும் கண்களை இமைப்பதன் பயனாக, பிரகாசமான சூரிய ஒளி மற்றும் மின்சார விளக்குகளிலிருந்து நமது கண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது

ஒளியின் பிரகாசம் அதிகமாகிவிட்டால் தானாகவே நமது கண்கள் மூடிக்கொள்வதை மநாம் பார்க்கிறோம். மேலும் கண்களுக்கு கெடுதல் விளைவிக்கக் கூடிய அதிக ஒளி கண்ணில் உள்ள ரெடினா (Retina) பகுதியில் புகாதபடி கண் இமைகள் பாதுகாக்கின்றன

கண்களை அடிக்கடி இமைப்பதன் பயனாக நமது கண்கள் ஈரமாக இருக்கின்றன; மேலும் கண்களை உறுத்தும் பொருட்களி லிருந்தும், பிரகாசமான அதிக ஒளியிலிருந்து கண்கள் பாதுகாக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...