Friday, 3 July 2020

வீறுகவியரசர் நூற்றாண்டு 'தொடர்வாசிப்புப் பயிலரங்கம்'




அன்புத்தமிழ் நெஞ்சத்தீர், இனியநல்வணக்கம்.
    *உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,*
 *அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்ப்பண்பாட்டுமையம்,*
*வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம், கல்விடுடே இருமொழி ஆய்விதழ் (ISSN-2320-4613), மாணவர் செயற்களம்* ஆகியவை இணைந்து
  தமிழ் மொழி-இன- நாட்டின் மீட்சிக்காகத் தம் படைப்புகளைப் படைக்கலனாய் ஏந்திப் போராடி தமிழ் வாழ்வே தம் வாழ்வென வாழ்ந்து தன்னேரிலாத் தமிழியப் புரட்சிக் கவிஞராய்த் திகழ்ந்த *வீறுகவியரசர் முடியரசனார்* நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடத்தும் தொடர் வாசிப்புப் பயிலரங்கத்தில் பங்கேற்றுப் பயன்பெற தமிழ்ச்சான்றோர், ஆசிரியர்கள், மாணாக்கர், ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..

📖📝 *பத்து நூல்கள்- பத்தாயிரம் பரிசுத்தொகை*🏆🏅
   பயிலரங்கத்திற்குத் தேர்வுசெய்யப்பெற்று புலனக்குழுவழி அனுப்பிவைக்கப்பெறும்
பத்து நூல்களைப் பத்து வாரங்களில் வாசித்து
ஒவ்வொரு வார இறுதியிலும் நூல் குறித்து  கட்டுரைவடிவில் தட்டச்சு செய்தோ அல்லது கையெழுத்துப்பிரதியை நிழற்படம் எடுத்தோ மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.      வாரம்தோறும் அனுப்பப்பெறும் பின்னூட்டப்படிவத்தையும் நிரப்பி அனுப்ப வேண்டும். தொடர்ந்து நூல் வாசிப்பில் பங்கேற்கும் நூல் வாசிப்பாளர்கள் அனைவருக்கும் *'திறன்மிகு வாசிப்பாளர்'* சான்றிதழ் அளிக்கப்பெறும்.     அறிஞர் குழுவால் தேர்ந்தெடுக்கப்பெற்ற கட்டுரைகள் *கல்விடுடே ஆய்விதழில் (ISSN-2320-4613)* வெளியிடப்பெறும். முடியரசனார் மின்னிதழ், வலைப்பூ,  *www.kalvitoday.org* இணையப்பக்கம் ஆகியனவற்றிலும்  வெளியாகும். நூலாகவும் தொகுத்து வெளியிடப்பெறும்.
     மேலும், சிறந்த கட்டுரைகளுக்கு
முதனிலை- *உரூ.3000,*
இரண்டாம்நிலை- *உரூ.2000,*
மூன்றாம்நிலை- *உரூ.1000,*
ஊக்கநிலை- *உரூ.200* (இருபது நபர்களுக்கு) *பரிசுத்தொகையும் பாராட்டுக்கேடயமும் நற்சான்றிதழும்*
வழங்கப்பெறும்.
   வெற்றியாளர்கள் வீறுகவியரசர் நூற்றாண்டு விழாவில் அருந்தமிழ்ச்சான்றோர்களால் சிறப்பிக்கப்பெறுவர்.
      **பங்கேற்புக்கட்டணம் கிடையாது.*
      * தொடர் பங்கேற்பு, பின்னூட்டம் அடிப்படையில் *மின்சான்றிதழ்* வழங்கப்பெறும்.
     * படிவம் நிரப்பி புலனவழி இணைய நிறைவுநாள்: *10-07-2020, வெள்ளிக்கிழமை* ⏳

📧 *மேலும் தொடர்புக்கு:* 📲
முனைவர் தமிழ்முடியரசன்,
செயலாளர்,
வீறுகவியரசர் முடியரசன் அவைக்களம்.
மின்னஞ்சல்: thamizhmudiyarasan@gmail.com
புலனம்: 9842589571
       
பயிலரங்கில் இணைவதற்கான பதிவுப்படிவ இணைப்பு: சொடுக்குக..
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfBsNE8ndiBAr36zty8GU5Q5oVMOO80h3JSR11mj8_FuyCdLw/viewform

        ------------------

No comments:

Post a Comment