Thursday, 2 July 2020

நடைபயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர்




எம்ஜிஆர் சிலை நடைபாதை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை இணைந்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி எம்ஜிஆர் சிலை நடைமேடை முன்பு நடைபெற்றது.
வைரஸ் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர் இருமும் போதும், தும்மும் போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் மூலம் மற்றவர்களுக்கு காய்ச்சல் பரவுகின்றது.  காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சுத் திணறல், தலைவலி, தொண்டை வலி, உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளவர்கள் அவசியம் மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கவும், குணமாக்கவும் சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீரானது நிலவேம்பு ,ஆடாதொடை, சீந்தில் கொடி, கற்பூரவள்ளி, திப்பிலி ,அக்ரகாரம், கோரைக்கிழங்கு, கோஷ்டம், கடுக்காய்த் தோல், இலவங்கம், முள்ளி, வட்டத்திருப்பி, சுக்கு, சிறுகாஞ்சொறி உள்ளிட்ட 15 மூலிகைகள் சேர்ந்து கபசுர குடிநீர் பொடி அரசு பொது மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் வழங்கப்படுகின்றது. 5 கிராம் கபசுர குடிநீர் பொடியினை 200 மில்லி தண்ணீரில் நன்கு காய்ச்சி 50 மில்லியாகச் சுருக்கி காலை, மாலை அருந்தினால் காய்ச்சல் குணமாகும்.
 மேலும் இருமும் போதும் தும்மும் போதும் கைக்குட்டை கொண்டு மூக்கு வாயை மூடிக்கொள்ள வேண்டும் சாப்பிடும் முன் கைகளை கிருமிநாசினி கொண்டு நன்றாக கழுவ வேண்டும் காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்த்து மருத்துவரை பார்க்க வேண்டும் என எம்ஜிஆர் சிலை நடைபாதை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன் எடுத்துரைத்தார். அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.

No comments:

Post a Comment