Thursday, 2 July 2020

நார்த்தங்காய்க்கு போட்ட உப்பும், நாத்தனாருக்குப் போட்ட சாப்பாடு வீண் இல்லை -பழமொழிக்கட்டுரை




பண்டைக் காலந்தொட்டு மனித மனம் களின் தன்மையை அறிந்து, இயற்கைப் பொருட்களின் தன்மையோடு ஒப்பிட்டு உயர்வு, தாழ்வு குணங்களைப் போற்றியும் தூற்றியும் மக்களை நன்னெறி படுத்தும் மொழிகள் இலக்கியந்தோறும் காணக் கிடைக்கப் பெற்றுள்ளது. அவற்றுள் பழமொழி சுருங்கச் சொல்லி பெருமளவு மாற்றத்தைத் தருகின்ற மொழியாக அமைந்ததே சிறப் பாகும்

சங்க இலக்கியத்தில் ஐவகை நிலமும் அந்தந்த நிலத்திற்குரிய மக்கள், அவர்தம் வாழ்க்கை முறை, திணை, பற்றி அழகாக அறியமுடியும். அகத்திணை பற்றிய செய்தி யில் தலைவன், தலைவி இயல்பு பற்றிக் கூறு மிடத்து பெரும்பாலும் இயற்கைப் பொருட்கள் மூலம் புலவர்கள் தங்கள் கருத்தை உயர்வு நவிற்சியாகக் கூறியுள்ளதைப் பல இடங் களில் காணலாம். தலைவனும், தலைவியும் சந்திப்பதற்கு, மர நிழலி(ல்), மரத்தி(ன்)னை சாட்சியாய் தங்கள் மனோநிலையை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.

மரங்கள் பலவகையாயினும் ஒவ்வொரு மரம் திற்கும் ஒவ்வொரு சிறப்பியல்பு உண்டு அதிலும் நார்த்தை' மரத்திற்குப் பெருஞ் சிறப்பு அதன் மணமும் மருத்துவ குணமும் ஆகும். இந்த 'நார்த்தை ' மரத்தின் இலையைப் பொடி செய்து உணவில் சேர்த்துக் கொள் வார். இதன் காய் பார்ப்பதற்கு 'சாத்துக்குடி போன்றிருந் தாலும் மிகுந்த புளிப்புச் சுவையுடைய. இதை நறுக்கி உப்பு போட்டு ஊறுகாய் ஆக ஆண்டு முழுவதும் பயன் படுத்துவர். இது எளியவர்களுக்குச் சாதத்தோடு தொட்டுக் கொள்ள, உடல் நலக் குறைவான போதும் கஞ்சியில் கலந்துண்ணப் பெரிதும் பயன்தரும் பொருள் 'நார்த்தங் காய் நீண்ட நாள் கெடாமல் இது இருக்கும். கிருமி நாசினியான உப்பு சற்று அதிகம் போடுவர். வெயிலில் நன்கு உலர்த்தி, காற்றுப் புகாத வண்ணம் ஒரு ஜாடியில் போட்டு மூடி வைப்பது. எனவேதான் 'நார்த்தங் காய்க்குப் போட்ட உப்பு வீண் போகாது' என்று சொன் னார்கள்! சரி.. அதென்ன... நாத்தனாருக்குப் போட்ட சாப்பாடு.... கணவன் உடன் பிறந்த தங்கையைத் தனது தங்கை அதாவது சகோதரியாகப் பாவித்து அன்போடு அன்னமிட்டு உபசரித்தால் அவள் மனம் வாழ்த்தும் அதனால் நம் வாழ்வு சிறக்கும். இதையே பிறந்த பெண் வாழ்ந்தால் வந்த பெண் வாழ்வோம். என்னும் மொழி யாலும் 'வீட்டுப் பெண்ணை கவனிக்க வேண்டிய சிறப்பினைக் கூறுவர். எத்துனை ஆழமான அன்பின் பிணைப்பு மற்றும் உறவுப் பாலத்திற்குத் தேவையான முயற்சி இக்கூற்று! ஒவ்வொரு பெண்ணும் எங்கோ பிறந்து எங்கோ வாழ்க்கை போகிறது. அப்படி வாழ செல்லுமிடத்தில் உள்ள பெண் நாத்தனார் முறையில் உள்ளவளை நன்கு கவனித்துக் கொண்டால் இவள் வாழ்வு றெக்கும், இதைப்பார்த்து பார்த்து வளரும் அவ்வீட்டுப் பெண் நாத்தனார் தான் வாழப் போகும் இடத்தில் உள்ள பெண்ணைத் தானும் நன்கு கவனித்துப் போற்றி வளர்க் கத் தானும் நன்கு வாழ்வாள் தன் குடும்பத்தையும் வாழ்விப்பான் அதைப்போல ஆண்டுக்கணக்கில் நார்த்தங்காயின் தன்மை கெடாது இருக்க 'உப்பு உதவுவது போல இங்கே நாம் நாத்தனாருக்குப் பரிந்து (கவனித்து ) போடும் உணவு.... அதனால் உறவு கெடாது மேலும் ஆல் போல் தழைக்கும் என்று இனிய இல்லறத்துக்குத் தேவையான அச்சாணியாக 'அன்பின் பிணைப்பை இப் பழமொழி எடுத்தியம்புகிறது.

ஆனால் இந்நூற்றாண்டில் வந்த பெண்ணும் நன்கு வாழ்வதில்லை. இங்கிருந்து போன பெண்ணும் வாழ் வதில்லை. உறவுப் பாலங்கள் இல்லை பாலங்கள் கோபம், பொறாமை, வெடித்துச் சிதறும் கோலங்கள் சின்னத் திரையின் சீரியல்களில் பெண்களை அலங்காரப் புதுமையாய், அடக்கியாளும் ஆணவக் காரர்களை, பழிக்குப் பழி வாங்கத் துடிக்கும் பழிகாரிகளாய் சித்தரித்து உலா விட்டதின் காரணமா சொல்லத் தெரியவில்லை.

தாய், மகள் உறவு கூட புரிந்து கொள்ள முடியாத புதிராய்ப் போகும் கொடுமை... நாத்தனார் உறவு முறை, மாமியார் மருமகள் உறவுமுறை ... நினைக்கவே நெஞ்சில் நடுக்கம்

பழமொழியின் அர்த்தம் புரிந்து, இதைப் படித்தபின் சிலராவது மனம் மாறினால் இம் முதுமொழிக்கு அதுவே மரியாதையாக இருக்கும் நம்பிக்கை தானே வாழ்க்கை... நல்ல மாற்றம் சமுதாயத்தில் நிகழும்

நார்த்தங்காயிற்குப் போட்ட உப்பு வீணாகாது என்பது போல நாத்தனாருக்குப் போடும் (பரிந்து) சாப்பாடு என்னும் வீண் போகாது என்பதை மகளிர் சமுதாயம் உணர்ந்து போற்றும்.

No comments:

Post a Comment