Thursday, 2 July 2020

வானம் நீல நிறமாகத் தெரிவது ஏன்?




நாம் உயிர் வாழ காற்று அவசியம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு தடவையும் நம்மைச் சுற்றியுள்ள காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். இந்தக் காற்று நம் பூமியைச் சுற்றிலும் ஒரு குறிப்பிட்ட உயரம்வரை பரவி யிருக்கிறது. பூமியைச் சுற்றிலும் காற்று பரவியுள்ள பகுதி காற்று மண்டலம் என்று அழைக்கப்படுகிறது. இது வாயு மண்டலம் என்றும் வழங்கப்படுகிறது.

மண்டலத்தில் பல வகையான வாயுக்கள் உள்ளன. நைட்ரஜன் 78 சதவீதம்மும், ஆக்சிஜன் 21 சதவீதம், கார்பன்-டை ஆக்சைடு 0.03 சதவீதமும் அடங்கியுள்ளன.

இவை தவிர புழுதித் துகள்களும் நீராவியும் மண்டலத்தில் காணப்படுகின்றன

சூரியனிலிருந்து, மற்ற விண்மீன்களில் இருந்து பூமியை நோக்கி வரும் ஒளி இந்த வாயு மண்டலத்தைக் கடந்து நம்மை வந்தடைகிறது.

பூமியிலுள்ள உயிரினங்கள் வாழ சூரிய ஒளி தேவை என்பதை முன்னரே தெரிந்து கொண்டோம். சூரியனிடமிருந்து வரும் ஒளி வாயு மண்டலத்தின் வழியே வரும்போது காற்றில் அடங்கியுள்ள புழுதித் துகள்கள் மீதும், நீர் மற்றும் காற்று மூலக்கூறுகள் மீதும் மோதுகிறது. இதன் விளைவாக சூரிய ஒளி சிதறி எல்லாத் திசைகளிலும் பரவுகிறது

இவ்வாறு சூரிய ஒளி சிதறுவதால், குரியன் காலையில் உதயமானதும் எல்லாப் பக்கங் களும் ஒரே நேரத்தில் பிரகாசமடைகிறது.

சூரிய ஒளி வெண்மை நிறமாக இருந் தாலும், உண்மையில் சூரிய ஒளியில் ஏழு நிறங்கள் அடங்கியுள்ளன என்பதை முன்னரே கண்டோம் சூரிய ஒளிக் கதிர்கள் வாயு மண்டலத்தின் மூலக்கூறுகளுடன் மோதும் போது, சூரிய ஒளியில் அடங்கியுள்ள ஏழு நிறங்களில் ஊதா (Violet), கரும்பில் (Indigo) நீலம் (Blue) ஆகிய மூன்று நிறங்கள் அதிகமாகச் சிதறுகின்றன. சிவப்பு நிறம் சிதறினாலும் இதனுடைய சிதறல் மிகக் குறைவாகவே உள்ளன அதிகமாகச் சிதறுகின்ற மூன்று நிறங்களும் அதிக சேரும்போது நீல நிறமே அதிக அளவில் உள்ளதால் நிறம் வானம் நீல நிறமாகத் தெரிகிறது.

பூமியைச் சுற்றிலும் வாயு மண்டலம் இருப்பதால் தான், நீல நிறமாகத் வானம் தெரிகிறது. பூமியைச் சுற்றிலும் வாயு மண்டலம் இல்லை என்றால், சூரிய ஒளி சிதறுவதற்கு வாய்ப்பு இல்லை. இதன் காரண மாக வானம் கருமை நிறமாக காட்சியளிக்கும்.

நாம் வாழும் பூமியின் துணைக்கோளான சந்திரனில் வாயு மண்டலம் இல்லாத காரணத் தால், சூரிய ஒளி சிதறுவதில்லை எனவே சந்திரனில் நின்று பார்த்தால் வானம் கருமை நிறமாகத் தெரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் பூமியைச் சுற்றி யுள்ள வாயு மண்டலத்துக்கு மேலே பறந்து செல்லும் விண்வெளிக் கப்பல் களிலிருந்து பார்க்கும்போது வானம் கருமை நிறத்தில் காணப்படும்.

No comments:

Post a Comment