Monday 6 July 2020

கடற்குதிரை என்றால் என்ன?




கடற்குதிரை ஆங்கிலத்தில் ஸீ ஹார்ஸ் (Sea Horse) என்று வழங்கப்படுகிறது இது கடற்சிங்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

கடற்குதிரை அல்லது கடற்சிங்கம் என்று அழைக்கிறோமே தவிர இந்தப் பிராணி உண்மையில் சிங்கமும் அல்ல, குதிரையும் அல்ல இந்தப் பிராணிக்கு குதிரையின் முகமும், பாம்பின் வால் போன்ற அமைப்பும் உள்ளது. இதனை கடல் தேவதையின் வாகன மாகக் கருதுகிறார்கள். இது மீன் இனத்தைச் சேர்ந்தது

கடற்குதிரையினுடைய உடல் முழுவதும் சொரசொரப்பான செதுக்குத் தகடு போன்ற எலும்புகளால் மூடப்பட்டது. இந்த மீன் இனத்தைச் சார்ந்த பிராணி ஆழம் குறைந்த கரையோரப் பகுதிகளில் கடற்பாசிகளின் இடையே மறைந்து வாழ்கிறார் இது மீன் இனத்தைச் சார்ந்தது இருந்தாலும், மற்ற மீன் வகைகளிலிருந்து மாறுபடுகிறது.

உயிரியல் விஞ்ஞானிகள் பலவகையான கடற்குதிரை இனங்களைக் கண்டறிந்து வருகின்றனர். இதுவரையில் 50 விதமான கடல் குதிரை இனங்களைப்பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துள்ளனர். வட அமெரிக்க கடலில் ஐந்து வகை கடற்குதிரை இனங்கள் வாழ்கின்றன என்று அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்

கடற்குதிரைகளின் நீளம் பலவாக வேறுபடு கிறது பொதுவாக சிறிய உருவத்திலேயே காணப்படுகின்றன

ஒரு அங்குலத்திலிருந்து ஒரு அடி வரை 2.5 செ. மீ.முதல் 30 செ.மீ செ.மீ. வரையிலான காலத்தில் கடற்குதிரை இனங்கள் வாழ்கின்றன. இதற்கு உள்ளன, கொன்று இரண்டு கண்கள் இந்த இரண்டு கண்களும் ஒன்று தொடர்பில்லாமல் தனித்தனியாக அமைந்துள்ளன பெண் கங்காருவுக்கு வயிற்றில் பை இருக்கும் என்று நம் எல்லோ ருக்கும் தெரியும். அதேபோல ஆண் கடற் குதிரையின் வயிற்றில் பை அமைந்திருக்கிறது

இந்தப் பையில் பெண் கடற்குதிரை முட்டை கள் இடுகிறது. முட்டை இடப்பட்ட 45 நாள் களில் முட்டைகள் வளர்ச்சியடைந்து, பொரிக்கப்பட்டு அதிலிருந்து புதிய கடற்குதிரை குஞ்சுகள் வெளிவருகின்றன

கடற்குதிரைகள் கடலில் நீந்தும் போது இதனுடைய உடல் செங்குத்தான நிலையில் இருக்கும்; இதனுடைய முகம் முன்பக்கமாக வெளியே குதிரையை நீட்டிக்கொண்டிருக்கும்; கடல் யாரும் உணவாக உண்பதில்லை கடற்குதிரை கோடைகாலத்தில் மட்டுமே காணப்படுகிறது குளிர்காலத்தில் இது எங்கோ மறைவிடத்தில் சென்று மறைந்து கொள்கிறது. இதனுடைய மறைவிடத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. மறைவான இடத்திலிருப்பதால் தப்பித்து விடுகிறது.

No comments:

Post a Comment

கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020"

 தலைப்பு: "கற்போம் எழுதுவோம் இயக்கம்-2020" # கவிஞர்: ந டில்லிபாபு # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- தாளவாடி # கல்வி மாவட்டம...